நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தவர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருக்கும் அவ்வப்போது நேரம் ஒதுக்கும் தனுஷ், தற்போது தாய் மாமனாக தனது கடமையை செய்துள்ளார். தனுஷின் சகோதரி டாக்டர் கார்த்திகாவின் மகனுக்கு திருப்பதியில் மொட்டை எடுக்கும் விழா நடந்தபோது அதில் தாய்மாமன்களான தனுஷ் மற்றும் செல்வராகவன் கலந்து கொண்டனர். தனுஷ் மடியில் உட்கார்ந்து கார்த்திகாவின் மகனுக்கு மொட்டை எடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டாக்டர் கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரர்களை பெருமையுடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.