Home சினிமா செய்திகள் சென்சேஷன் இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

சென்சேஷன் இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

by Thushyanthy Nirooshan

மிழில் Gireesaaya எனும் இயக்குனரின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வெளிவந்த படம் ஆதித்ய வர்மா. இப்படம் தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் என்பதனை நாம் அறிவோம்.

ஆம் இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை அடைந்திருந்தாலும் தமிழில் ரசிகர்கள் இடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை.  மேலும் இப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் எந்த படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி பரவலாக பேசப்பட்டு வந்துது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளார் என்றும் இப்படத்தை ஆதித்ய வர்மா படத்தை தயாரித்த முகேஷ் கே மேத்தா தான் தயாரிக்க போகிறார் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment