Home உலகச் செய்திகள் சுவிஸ் குடிமக்களுடன் 2,000 பேர் திரண்ட தேவாலய நிகழ்ச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வெளியானது

சுவிஸ் குடிமக்களுடன் 2,000 பேர் திரண்ட தேவாலய நிகழ்ச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வெளியானது

by Thushyanthy Nirooshan

சுவிஸ் எல்லையில் சுமார் 2,000 பேர் திரண்ட தேவாலய நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள Mulhouse பகுதியில் பல நாட்கள் நீடித்த தேவாலய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

குறித்த விழாவில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சுமார் 30 சுவிஸ் மக்களும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் பாஸல் பகுதி மக்களே குறித்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர் எனவும்,

அவர்களே மிக அருகாமையில் வசித்துவரும் மக்கள் எனவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இரு குடும்ப உறுப்பினர்கள் எனவும், பிரான்ஸ் நாட்டில் இவர்களுக்கு உரிய சோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment