Home உலகச் செய்திகள் சுவிஸ் இத்தாலி எல்லையை மூடவேண்டும்: சுவிஸ் மக்கள் விருப்பம்!

சுவிஸ் இத்தாலி எல்லையை மூடவேண்டும்: சுவிஸ் மக்கள் விருப்பம்!

by Thushyanthy Nirooshan

சுவிஸ் மக்களில் கால் வாசிப்பேர் சுவிஸ் இத்தாலி எல்லையை மூடவேண்டும் என்று விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

செய்தித்தாள் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்று, கொரோனா அச்சம் காரணமாக, சுவிஸ் மக்களில் கால் வாசிப்பேர் சுவிஸ் இத்தாலி எல்லையை மூடவேண்டுமென விரும்புவதாக தெரிவித்துள்ளது.

சுவிஸ் குடிமக்களில் நான்கில் ஒருவர் இத்தாலியுடனான சுவிஸ் எல்லையை மூடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சீனா, தென் கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் இத்தாலியும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 76 சதவிகிதத்தினர் 1,000 பேருக்கும் அதிகமானவர்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது சரிதான் என்று எண்ணுகின்றனர்.

மேலும், 86 சதவிகிதத்தினர் சுகாதார அலுவலகம் கொரோனா வைரஸ் குறித்து போதுமான அளவு தகவல் அளித்துள்ளதாக கருதுகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கும் 6ஆம் திகதிக்கும் நடுவில், சுவிட்சர்லாந்தில் 1,074 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுவிஸ் மக்களில் மூன்றில் இரண்டு பாகம் பேர் கொரானாவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment