Home இலங்கைச் செய்திகள் சுமந்திரன் பல பொய்களை சொல்கிறார் !!! பல உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த சட்டத்தரணி ந.காண்டீபன்.

சுமந்திரன் பல பொய்களை சொல்கிறார் !!! பல உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த சட்டத்தரணி ந.காண்டீபன்.

by nirooshan

கடந்த இரண்டு கூட்டங்களில் சுமந்திரன் பல பொய்களை சொல்கிறார். பொய்யை பல முறை சொல்வதால் அது உண்மையாகி விடும் என அவர் வழக்கமாக செயற்படுவதை போல இந்த பொய்களை சொல்கிறார். கஜேந்திரகுமார் ஆசனங்களிற்காகவே வெளியேறினார் என சுமந்திரன் சொல்வது பொய். அந்த சம்வங்கள் நடந்தபோது, சுமந்திரன் இந்த அரசியலிலேயே இருக்கவில்லை. நடந்த சம்பவங்களிற்கு நான் ஒருவனே சாட்சியாக இருக்கிறேன் என பல உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த சட்டத்தரணி ந.காண்டீபன்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நேற்று (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ஆசனங்களிற்காகவே கஜேந்திரகுமார் தரப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டிருந்தார்.

சுமந்திரன் கூறியது பொய் என, அன்றைய நாளில் இந்த விவகாரங்களில் தொடர்புபட்டிருந்த சட்டத்தரணி ந.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2010ம் ஆண்டு மறைந்த நீலகண்டன் ஐயா எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார்.  இந்த நெருக்கடியான சமயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறியுள்ளது. இது எம்மை பலவீனப்படுத்தும். நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள், தமிழ் தேசிய அரசியலை முன்கொண்டு செல்பவர்கள் என்ற  அடிப்படையில், தமிழ் காங்கிரஸை மீண்டும் கூட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கு ஏதாவது சந்தர்ப்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இது பற்றி நீங்கள் கஜேந்திரகுமாருடன் பேசிப்பார்க்கிறீர்களா என கேட்டார்.

நான் அப்பொழுது எந்தக்கட்சியின் உறுப்பினரும் அல்ல.

இந்த விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார் உடன் பேசி உங்களுக்கு மீண்டும் அழைப்பேன் என நான் அவரிடம் கூறினேன். அதன்படி கஜேந்திரகுமார் இடம் பேசினேன். நடுநிலைமையான நீங்கள் சிலர் இதில் இருப்பதால் இந்த விடயம் குறித்து பேசத் தயாராக இருக்கிறேன் என கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். இதன்படி மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் மாவை சேனாதிராஜாவிற்குரிய வீட்டில் அந்த சந்திப்பு நடந்தது.

அந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதிருந்த நான்கு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஈ.பி.ஆர்.எல் தலைவர் சுரேஷ், ரொவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தரப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா கலந்து கொண்டனர். அப்பொழுது அரசியலிலேயே சுமந்திரன் இல்லை. அந்தக் கூட்டத்தில் இருந்தவன் நான். 2010 தேர்தலுக்குப் பின்னர் தேசியப்பட்டியலில் வந்தவர் சுமந்திரன்.

அந்தக் கூட்டத்தில் சம்மந்தன் வழக்கம் போல கண்ணை மூடிக்கொண்டு, தேர்தல் வரப்போகிறது, ஆசனங்கள் ஒதுக்க வேண்டும், நீங்கள் வரவில்லை என்பதால் அம்பாறைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. அதில் மாற்றம் செய்ய முடியாது. ஏனைய மாவட்டங்களில் உங்களுடைய வேட்பாளர்களைத் தாருங்கள், ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளலாம் எனக் கூறினார்.

அப்பொழுது கஜேந்திரகுமார் சொன்னதை அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்

ஐயா இது தேசிய பிரச்சினை. இழப்புக்களின் மீதும் உயிரிழப்புகளின் மீதும் இருந்து பேசிக் கொண்டிருக்கிறோம். கண்ணைத் திறந்து நான் சொல்வதைக் கேளுங்கள் என்றார்.

நீண்ட இழப்புக்கள், சொல்ல முடியாத துயரங்களின் பின்னர் இந்த இடத்தில் இருக்கிறோம். தமிழர்களுடைய எழுபது வருட நீண்ட போராட்டத்தின் ஊடகப் பயணம் செய்யும் இந்த இனத்தின் சார்பில் நாங்கள் முன்னிறுத்த வேண்டிய கொள்கை விடயங்களில் நாங்கள் முதலில் உடன் படுவோம் என்றார்.

கொள்கை சார்ந்த முரண்பாடு இருந்ததாலேயே, அவர் கொள்கை பற்றி பேசினார்.

இந்தக் கொள்கை கோட்பாடு விடயங்களை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி கொண்டிருக்க முடியாது என சம்பந்தன் சொன்னார். அப்பொழுது நீலகண்டன் தலையிட்டு கொள்கை விடயங்களை நாங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம், முதலில் காங்கிரசை உள்வாங்குவதை பற்றி யோசிக்கலாம் என என்னிடம் நீலகண்டன் சொன்னார். நானும் அதற்கு உடன்படவில்லை.

இன்னொரு விடயத்தையும் பேசினார்கள். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தீர்வு யோசனையொன்று தயாரிக்கப்பட்டிருந்தது

அதற்கு தமிழ் காங்கிரஸின் சம்மதம் இருக்கவில்லை. எமது கட்சியின் சம்பந்தமில்லாத ஒன்றை கூட்டமைப்பின் ஆவணமாக எப்படி உங்களால் சமர்ப்பிக்க முடியுமென்றும் கேட்டார்.

தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கொள்கை சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் வெளியேறினார். ஆனால்,  ஆசனங்களுக்காக வெளியேறியதாக சுமந்திரன் குறிப்பிடுகிறார். இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இன்று நான் மட்டுமே இருக்கிறேன். நீலகண்டன் ஐயா இல்லை. ஏனைய கட்சித் தலைவர்கள் இதைப்பற்றி வாய் திறக்க வேண்டும்.

தேர்தல் ஒன்று வருவதனால் இந்த விடயங்களில் தொடர்ந்தும் சுமந்திரன் மீண்டும் மீண்டும் போய் சொல்லுகின்றார். பொய்யான தகவல்களை சுமந்திரன் சொல்வதற்கு காரணம், நேர்மையான அரசியலை கடந்த 10 வருடங்களாக நாம் முன்னெடுத்து வருகிறோம். அதனால் எம் மீது சேறு பூச முயல்கிறார்.

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிற்கு சட்டத்தரணிகள் என்றால் ஒரு மயக்கம் இருக்கும்.

தமிழ் அரசு கட்சியும், தமிழ் காங்கிரசும் இணைந்துதான் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தன. இந்த உண்மைகளை மறந்து, அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை நோக்கி குற்றம்சுமத்த முடியாது என்றார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment