இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான பதவிநிலை பிரிகேடியர் ஜெனரல் நவாப் டி அலோடைபி பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் நேற்று (4) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினை விடயங்கள் தொடர்பான கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இறுதியில் சிறந்த நல்லுறவு பரிமாற்றத்துடன் இந்த சந்திப்பு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.