தல அஜித் மனைவி ஷாலினி அஜீத் தனது மகளுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ’திரௌபதி’ படத்தை பார்த்து ரசித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
ரோகினி திரையரங்கின் உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’திரௌபதி’ படத்தை ஷாலினி அஜித்தும் அவரது மகள் அனோஷ்காவும் பார்க்க வந்தது குறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார்.
தல அஜித் தன்னுடைய படங்களையே தியேட்டருக்கு பார்க்க வருவதில்லை என்பதால் வழக்கம் போல அவர் இந்த படத்தையும் பார்க்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது சகோதரர் ரிச்சர்ட் முக்கிய வேடத்தில் நடித்த ’திரௌபதி’ திரைப்படத்தை ஷாலினிஅஜித் பார்க்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று வெளியான ’திரௌபதி’ திரைப்படம் ரூ.90 லட்சத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது