கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதிலும் 28, 529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
மேலும், கொரோனா கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், அதன் உதவி எண்களைப் பகிர்ந்தார் (011 – 23978046).
இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமூடி அணிந்தே வந்தனர்.