உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவிட்டதை அடுத்து மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, ஒவ்வொரு குடிமகன்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பிரபலங்கள், திரையுலகினர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் நடிகர் அரவிந்தசாமி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பொறுப்புள்ள சமூக அக்கறையுடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வணக்கம் மக்களே, நாம் அனைவரும் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உடல்நலம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும், அது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அரவிந்தசாமியின் இந்த டுவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.