Home சினிமா செய்திகள் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க நடிகர் விவேக் கூறும் டிப்ஸ்கள்!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க நடிகர் விவேக் கூறும் டிப்ஸ்கள்!

by nirooshan

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் ’கை குலுக்குவதை நிறுத்திவிட்டு தமிழக கலாச்சாரமான கையெடுத்து கும்பிட்டாலே கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்

கொடைக்கானலில் இருந்து பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும் ஒரு வைரஸ். முதலில் இந்தியா போன்ற அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் கொரோனா வைரஸ் தாமாகவே அழிந்து விடும். எனவே கொரோனா குறித்து யாரும் பயப்படவேண்டாம்

இருப்பினும் பாதுகாப்பு காரணமாக அனைவரும் செய்ய வேண்டியது ஒன்று என்னவெனில் அனைவரும் சோப்பு போட்டு கைகளை அடிக்கடி நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இருமல், தும்மல் வந்தால் கைகுட்டை மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்

மேலும் இருமல் அல்லது தும்மல் அடிக்கடி வருபவருடன் நெருங்கி பழக கூடாது. அவர்களிடம் மாஸ்க் போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழக கலாச்சாரம் என்ற ஒன்று உள்ளது. அதன்படி யாருக்கும் கைகொடுக்காமல் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டும். இதனை கடைபிடித்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment