அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,பிப்ரவரி 24, 25 தேதிகளில், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மோடி அரசுதீவிரமாக செய்து வருகிறது.இதனிடையே, ‘இந்தியா வரும் ஜனாதிபதி டிரம்ப், இந்தியா கொண்டுவந்துள்ள மத அடிப்படையிலான குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து, இந்தியப் பிரதமர் மோடியோடு பேசுவார்’ என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருப்பதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.“டிரம்ப் இந்தியாவில் இருக்கும்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை குறைப்பது பற்றி ஊக்குவிப்பார். ஜனநாயக வழிமுறைகள் மற்றும் மரபுகளை கடைப்பிடிப்பதில் இந்தியாவில் எழுந்துள்ள பிரச்சனைகள் மீது, அமெரிக்காவின் கவலை அதிகரித்து வரும் நேரத்தில், சிஏஏ, என்ஆர்சி குறித்து பிரதமர்மோடியுடன் டிரம்ப் பேசுவார். குறிப்பாக, ஜனநாயகம் மற்றும் மத சுதந்திர பிரச்சனையை டிரம்ப் எழுப்புவார். பொதுவெளியில் அல்லாவிட்டாலும், நிச்சயமாக தனிப்பட்ட முறையிலாவது இந்த உரையாடல் நடக்கும்” என்று‘தி இந்து’விடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்
previous post