கர்நாடகாவில் கார் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிக்கனம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார் தும்கூர் அருகே குனிகள் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் விபத்தில் சிக்கியது அதில் பெங்களூரை சேர்ந்த 3 பேரும் பலியாகினர். மேலும் காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்