Home சினிமா செய்திகள் கமல், ஷங்கர் இல்லாமல் நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

கமல், ஷங்கர் இல்லாமல் நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

by Thushyanthy Nirooshan

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த ‘இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி திடீரென இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதால் இன்னும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக பாடலொன்று வெளிநாட்டில் படமாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் மற்றும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்ததாகவும், இதனை அடுத்து இந்த படப்பிடிப்பை அனுமதி பெற்ற காலத்திற்குள் நடத்தாவிட்டால் அந்த பகுதியில் இனிமேல் படப்பிடிப்பே நடத்த முடியாது என்றும் கூறப்பட்டது.

ஆனாலும் ‘இந்தியன் 2’ விபத்து விசாரணை காரணமாக கமல், ஷங்கர் உள்பட படப்பிடிப்பு குழுவினர்கள் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர்கள் இந்த பாடலை வெளிநாட்டில் படமாக்கியதாக செய்திகள் வெளிவந்தது. இந்த பாடலில் கமல்ஹாசன் நடிக்க வேண்டிய காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் பிரமாண்டமாகவும் அவருடைய பாணியிலும் இருக்கும் ஆனால் முதல் முறையாக ‘இந்தியன் 2’படத்தில் ஷங்கர் இல்லாமல் பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment