Home சினிமா செய்திகள் ‘ஓ மை கடவுளே’ வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

‘ஓ மை கடவுளே’ வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

by Thushyanthy Nirooshan

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான வாணி போஜனை கேட்டு தனக்கு அதிகமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் இதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எம்கேபி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பூபாலன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ படத்தில் தனது செல்போன் எண்ணை கதாநாயகி வாணிபோஜன் கூறுவது போன்ற காட்சி உள்ளது என்றும், அந்த படத்தில் வாணி போஜன் கூறிய மொபைல் எண் தன்னுடையது என்றும், இந்த காட்சியால் நடிகை வாணி போஜனை கேட்டு, தினந்தோறும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் தனக்கு வருவதாகவும் தன்னுடைய அனுமதியின்றி தனது மொபைல் எண்ணை பயன்படுத்திய படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பூபாலன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ‘ஓ மை கடவுளே’ படக்குழுவினர் என்ன விளக்கம் அளிக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment