Home இலங்கைச் செய்திகள் உறங்கிக் கொண்டிருந்த பெண் மீது வாள்வெட்டு

உறங்கிக் கொண்டிருந்த பெண் மீது வாள்வெட்டு

by Thushyanthy Nirooshan

உறங்கிக் கொண்டிருந்த பெண் மீது மா்ம நபா் ஒருவா் மேற்கொண்ட சரமாாி வாள்வெட்டு தாக்கு தலில் படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளாா். இந்த சம்பவம் மட்டக்களப்பு- ஆயித்தியமலை நெடியமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவ து, குறித்த இளம் பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதால் தனது மூன்று பிள்ளைகளுடன் 

உறவினர்களின் பாதுகாப்பில் இவர் வசித்துவந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் தாயும் பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்த வேளையில் வீட்டின் கூரை வழியாக ஓடுகளை கழட்டிக்கொண்டு வீட்டினுள் இறங்கிய மர்ம நபர், 

உறக்கத்திலிருந்த பெண்ணை கூரிய கத்தியினால் தலையிலும் கையிலும் வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை காவல்துறையினர் மற்றும் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் காவல்துறையினரும் 

இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment