ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று (03) முதல் தேர்தல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (03) ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடன் கண்டிக்கு சென்ற அவர் மகாநாயகர்களை சந்தித்தபின் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.