Home உலகச் செய்திகள் அமைதியான உரையாடலே முன்னேற்றத்திற்கு வழி வன்முறையாளர்களை மேலோங்க விட வேண்டாம்.

அமைதியான உரையாடலே முன்னேற்றத்திற்கு வழி வன்முறையாளர்களை மேலோங்க விட வேண்டாம்.

by Thushyanthy Nirooshan

தில்லி சம்பவமானது, இந்திய முஸ்லிம் களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வன்முறை என்றும், இவ்விவகாரத்தில், புத்தியற்ற வன் முறையாளர்களை மேலோங்க விடக்கூடாது என்றும் ஈரான் கூறியுள்ளது.ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரீப் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலையை ஈரான் கண்டிக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஈரான், இந்தியாவின் நண்பராக இருந்து வருகிறது. அந்த வகையில், ‘அனைத்து’ இந்தியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த, புத்தியில்லாத குண்டர்களை மேலோங்க விடக் கூடாது என்று இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார். அனைத்துஇந்தியர்கள் என்ற வார்த்தையில் ‘அனைத்து’(ALL) என்பதை பெரிய எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அமைதியான உரையாடல் மற்றும்சட்டத்தின் ஆட்சி மூலம்தான் முன்னேற்றமான பாதைக்குச் செல்ல முடியும்” என்றும் ஜவாத் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.தில்லி வன்முறைக்கு, இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ கண்டனங்களை பதிவு செய்திருந்தன. தற்போது நான்காவது நாடாக, ஈரானும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.இதனிடையே, ஈரான் அமைச்சரின் டுவிட்டர் பதிவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரான் தூதர் அலி செக்கெனிக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மனும் அனுப்பியுள்ளது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment